Tamil News & POLLING

 

நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.1 கோடி மோசடி முழுக்க முழுக்க ஒரு பொய்!

4 years ago 03 ஜூலை 2021 05:25 AM | views : 129
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வீணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே .சுரேஷ் நேற்று திடீர் என காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது தன் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையாளர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது...



"நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, "நான் இந்தச் சினிமா துறையில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். தயாரிப்பாளராகப் பல படங்கள் தயாரித்துள்ளேன். பல படங்களை விநியோகம் செய்துள்ளேன். என்னைப் பற்றியும் எனது நாணயம் பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் எனது தேவைக்காக வேறு வீடு வாங்கியதால் நான் வாழ்ந்த வீட்டை விற்றேன். நான் விற்றேன் இன்னொருவர் வாங்கினார். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம்.



நான் என் வீட்டை விற்பதற்காக ஏன் இன்னொருவருக்கு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்? அதிலே நான் மோசடி செய்ய வேண்டும்? இது முழுக்க முழுக்க ஒரு உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான புகார். விற்கப்போகும் என் வீட்டுக்காக நான் ஏன் கடன் வாங்க வேண்டும்?

என்மீதான இந்த பொய்ப்புகார் வேண்டுமென்றே சிலரின் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எனது விளக்கத்தையும் என் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் இன்று ஆணையாளர் அலுவலகத்தில் நான் கொடுத்திருக்கிறேன். அந்த பொய்யான புகாரின் மீது விசாரிப்பதாக ஆணையாளர் அவர்கள் கூறியுள்ளார்." இவ்வாறு நடிகர் ஆர்.கே .சுரேஷ் கூறியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI ADMK டிடிவி தினகரன் AMMK AIADMK TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழகம் PMK INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN இந்திய அணி சீமான் பாமக பிரதமர் மோடி கொலை கைது CONGRESS அன்புமணி ராமதாஸ் அமமுக கோவை EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH தீபாவளி வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN திருநெல்வேலி கள்ளக்காதல் திருமாவளவன் விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி தமிழ்நாடு நெல்லை ஓபிஎஸ் TAMIL ACTRESS மதுரை AJITH NELLAI SEEMAN கீர்த்தி சுரேஷ் MADURAI பாலியல் தொல்லை அஜித் தேவர் OPS NORTHEAST MONSOON வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI டிரெண்டிங் டாப் நியூஸ் ELECTION COMMISSION தமிழக அரசு ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் வன்னியர்