திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45) இவரது மனைவி பெயர் சுதா(36). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுதா, திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கு உடன் பணிபுரியும் பாலசுப்பிரமணியனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்தை மீறிய பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த கணவர் கார்த்திகேயன் சுதாவை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் மீது சுதா வெந்நீரை ஊற்றியுள்ளார்.
இதனால், துடிதுடிக்கொண்டிருந்த கார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் சுதா மற்றும் பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவர் மீது மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S