ரூ. 300 கோடி தருகிறோம் என்று ஓடிடி நிறுவனம் ஒன்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமையை கொடுக்காததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவிட்டதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டும் வலிமை ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். இந்நிலையில் வலிமையை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அதில் ஒரு நிறுவனம் ரூ. 300 கோடி தருகிறோம் என்று கூறியும் தயாரிப்பாளர் போனி கபூர் மசியவில்லையாம்.
இத்தனை கோடியை காட்டியும் மனிதர் அசையவில்லையே என பலரும் வியக்கிறார்கள். ஆனால் வலிமையை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று போனி கபூரிடன் அஜித் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
வலிமையை ஓடிடியில் வெளியிட்டால் என் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள். அதனால் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யணும் என்றாராம் அஜித். அவரின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது என்று தான் போனி கபூர் அமைதியாக இருக்கிறாராம்.
Boney Kapoor Is Not Interested In Giving Valimai To Ott Platform
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S