POLLING FLAMES

 

சிம்னி விளக்கு .... அற்புத விளக்காக இருந்த காலம்!

4 years ago 18 அக்டோபர் 2021 03:03 PM | views : 255
கிராமத்திலுள்ள கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கே கடைவிரிக்கப்பட்டிருந்த பல பொருட்களில் இந்த சிம்னி விளக்கும் அடக்கம்.எப்பொழுதோ அடக்கமாகிவிட்ட சிம்னி விளக்கு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பார்த்தவுடன் பயங்கர ஆச்சர்யம்.இந்த விளக்கு இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று அந்த ஆச்சர்யம்
சிம்னி விளக்கு.பார்க்கவே மிக சின்னதாகவும், அதில் பொருத்தப்பட்டு இருக்கிற கண்ணாடி குடுவையானது மேலும் கீழும் சிறுத்து நடுவில் கொஞ்சம் பெரிதாய் அகண்டும் ஒப்ப இருக்கும் இந்த குடுவை, அதில் மிக சரியாய் பொருத்தப்பட்டும், ஒரு சின்ன தூண்டுகோல் திரியை ஏற்றுவதற்கும், அடிப்பாகத்தில் எண்ணைய் ஊற்ற உருண்டைப்பகுதியும் இவற்றையெல்லாம் தாங்க ஒரு சின்ன அடிப்பகுதியும் இருக்கிறது.மேலும் அதிக கனமில்லாமல் இருக்கிற ஒரு அற்புத விளக்கு இது.
முன்பொரு காலத்தில் இரவு நேரத்தில் வீடானது மிகவும் இருட்டாக இருப்பதை தவிர்க்க ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு போல உபயோகப்படுத்தப்பட்ட விளக்கு இது.200 மில்லி சீமண்ணைய் இருந்தால் போதும் விடிய விடிய எரியும்.மின் வசதி இல்லாத காலத்தில் இந்த விளக்கும் அரிக்கேன் விளக்கும் தான் துணை.இந்த விளக்கின் துணை கொண்டு எத்தனையோ பேர் படித்து இருக்கின்றனர்.நானும் சிறு வயதில் இந்தவிளக்கில் தான் படித்திருக்கிறேன். இருட்டின் பயத்தை போக்க தலைமாட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கியிருக்கிறேன்.அருகில் உள்ள அடுத்த அறைக்கு செல்லும் போது இந்த விளக்குதான் துணையாய் இருந்திருக்கிறது.
பள்ளி முடிந்து வந்தபின் இந்த விளக்கின் கண்ணாடியை எடுத்து விபூதி போட்டு பளிச்சென துடைத்து எண்ணைய் ஊற்றி வைப்பது தினமும் வழக்கப்படியாயிருந்தது.கரண்ட் வசதி வந்தபின்னும் இந்த விளக்கு சின்ன சின்ன உபயோகத்திற்கு பயன்பட்டு வந்தது.இரவு நேரங்களில் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் உடனடியாக பொருத்தி வைக்கிற விளக்கு இது தான்.கொசுவர்த்தி மேட் வந்தபின்பு இந்த சிம்னி விளக்கின் கண்ணாடியின் மேல் ஒரு பிளேடு வைத்து அதில் கொசு மேட் வைத்து சிறிதாக திரியை வைத்து மெலிதாய் எரியும் படி செய்து கொசுவிரட்டியாக பயன்படுத்தியது ஞாபகத்தில் இருக்கிறது.
மண்ணெண்ணைய் அதிகம் புழக்கத்தில் இருந்தபோது இந்த விளக்கு அத்தியாவசியமானதொன்றாக இருந்தது.எப்பொழுது மண்ணெண்னணெய் க்கு தட்டுப்பாடு வந்ததோ அதில் இருந்து இந்த அற்புத விளக்கு மறைய ஆரம்பித்தது.கரண்ட் வசதியும் வர சுத்தமாய் ஒழிந்து விட்டது.ஆனாலும் இன்னும் கரண்ட் வசதியில்லாத எத்தனையோ வீடுகளில் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதேச்சையாய் இதை எங்காவது காணும்போது நம் ஞாபகத்திலும். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM கோவை முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக வன்னியர் சீமான் தமிழ்நாடு தேவர் OPS TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை NELLAI கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கைது SURIYA THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH தீபாவளி சூர்யா ஓபிஎஸ் மதுரை விடுமுறை கள்ளக்காதல் அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK அன்புமணி கீர்த்தி சுரேஷ்