முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நிறைவடைந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், சென்னையிலுள்ள விஜயபாஸ்கர் வீடு உட்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி அவர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி வீட்டில் சுமார் மூன்று மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனை தற்பொழுது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S