POLLING FLAMES

 

தவெக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்; செங்கோட்டையன்

1 hour ago 28 ஏப்ரல் 2026 01:04 PM | views : 26

திண்டுக்கல்,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தனித்துப்போட்டியிட்டது.


இதனிடையே, தவெக தலைவர் விஜய் இன்று காலை திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தவெக வேட்பாளருமான செங்கோட்டையன் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நாளைய தமிழகத்தை ஆளப்போகும் முதல்வர் இன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இன்று ஒரு சிறந்த நாள். அவரின் தொலைநோக்கு சிந்தனை நாளை தமிழகத்தை ஆளும். மக்கள் ஒருமனதாக அவரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, இனப்புரட்சி, சமூக புரட்சி போல் வரும் 4ம் தேதி தமிழகத்தில் விஜய்-இன் விசில் புரட்சி வர உள்ளது. தேர்தலில் தவெக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்

என்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ANNAMALAI AMMK ADMK தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS PMK கனமழை பாமக AIADMK மு.க.ஸ்டாலின் UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் கோவை தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE முக ஸ்டாலின் CONGRESS கைது சீமான் திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் OPS KEERTHY SURESH அமமுக வன்னியர் பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் நெல்லை தமிழ்நாடு NELLAI SURIYA TAMIL ACTRESS சூர்யா மதுரை BIGG BOSS TAMIL தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN AJITH 2024 T20 WORLDCUP தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி தீபாவளி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அஜித் விடுமுறை தூத்துக்குடி பாலியல் தொல்லை RAJINIKANTH கள்ளக்காதல் தென்காசி CSK கீர்த்தி சுரேஷ்