POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

4 days ago 13 ஏப்ரல் 2026 05:26 AM | views : 37

கோவை: ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு. அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில் ஆனந்த் ஆகியோரை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து செங்கோட்டையன் கலந்துரையாடினாா்.



இதைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டும் ஒரே சக்தி விஜய்திமுகவை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ளது. இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்ந்து வருகிறாா். மக்களும் நமக்கு வாக்களிக்க ஆா்வமாக உள்ளனா்.


தோ்தலில் 10 முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது. ரூ.8 ஆயிரம் டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்ற திமுக நினைக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கமாட்டேன் என்று தலைவா் விஜய் உறுதியளித்துள்ளாா்.எல்.முருகன்தான் பொறுப்புஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட்டு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளாா்கள்.ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதற்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன்தான் பொறுப்பு.


அந்தத் துறைக்கான அமைச்சர் அவர்தான்.கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள்தான சொல்ல வேண்டும் என செங்கோட்டையன் கூறினார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI TVK பாஜக அண்ணாமலை BJP தவெக AMMK ADMK TTV DHINAKARAN ANNAMALAI உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை PMK பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் திருமாவளவன் CONGRESS இந்திய அணி சட்டசபை தேர்தல் தமிழகம் கோவை கைது ரஜினிகாந்த் சீமான் நெல்லை NELLAI KEERTHY SURESH வன்னியர் COIMBATORE வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI OPS PARLIAMENT ELECTION கொலை INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி தேவர் அமமுக ஓபிஎஸ் THIRUMAVALAVAN AJITH SURIYA தென்காசி TAMIL ACTRESS மதுரை தமிழ்நாடு பாலியல் தொல்லை TAMILAGA VETTRI KAZHAGAM MADURAI திருப்பரங்குன்றம் BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI சூர்யா NORTHEAST MONSOON CSK ASSEMBLY ELECTIONS தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ் தீபாவளி ELECTION COMMISSION அன்புமணி கள்ளக்காதல் கொரோனா