பிணவறையில் பெண் சடலங்களை நிர்வாணமாக ரசிக்கும் வக்கிர குணம் கொண்ட ஊழியர்
பெங்களூரு,
கர்நாடாக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் முனிர் அகமது என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் இறந்து பிரேதப்பரிசோதனைக்கு வரும் இளம்பெண்கள் மற்றும் திருமண மான பெண்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
நிர்வாண வீடியோமேலும் அதனை தனது செல்போனில் பதிவு செய்து தனிமையில் இருக்கும் போது ரசித்துப்பார்த்து மகிழ்ந்துள்ளார். இந்த வக்கிர குணம் கொண்ட அவரைப்பற்றி அவருடன் வேலைபார்க்கும் ஒருவருக்கு தெரிந்துள்ளது. இது போன்று செய்யவேண்டாம் என்று அவர் கண்டித்துள்ளார்.
ஆனாலும் கேட்காத முனிர் அகமது தொடர்ந்து பிணவறைக்கு வரும் இறந்த பெண்களின் உடல்களை நிர்வாணமாக்கி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து அவருடன் வேலைபார்க்கும் நபர் இதுகுறித்து பிண வறை டாக்டரிடம் கூறினார்.
பின்னர் டாக்டர் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் இறந்த பெண்களின் நிர்வாண வீடியோ, புகைப்படம் இருந்துள்ளது. இதுகுறித்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரி டீனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் டீன் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து அறிந்த முனிர் அகமது அங்கிருந்து தப்பிச்சென்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்த மகளிர் ஆணையத்தினர் பெண்கள் உயிருடன் இருக்கும்போது நிம்மதியாக வாழமுடியவில்லை. இறந்த பிறகும் நிம்மதியாக உடலை மறைக்கமுடியவில்லை எனக்கூறியுள்ளனர்.
மேலும் இந்த வக்கிர குணம் கொண்ட நபர் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறை வாக உள்ள முனிர் அகமதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
பகிரவும்: