POLLING 📊 TN ELECTION 2026

 

பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!

2 hours ago 10 ஏப்ரல் 2026 12:01 PM | views : 17

நடிகர் ஜீவா தனது எக்ஸ் தளத்தில் ஜன நாயகன் படம் இணையத்தில் வெளியானதைக் கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பலரது உழைப்புக்குத் துரோகம் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் விஜய் தனது கடைசி படமாக ஜன நாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்கியிருந்தார். கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


பொங்கலுக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தள்ளிபோனது. விஜய் அரசியலில் ஈடுபட்டதாலே தனது கடைசி திரைப்படமான ஜன நாயகனுக்கு பாதிப்பு வந்ததாக பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்றிரவு 5 நிமிஷ படக் காட்சிகள் வெளியானதக் கூறப்பட்டது. பின்னர், இன்று காலை முதல் ஜன நாயகன் மொத்த படமும் வெளியாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியாகியுள்ளது. இதனை வெளியிட்டவர்கள், பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பெடுமென படக்குழு வக்கீல் நோட்டீஸ் அளித்திருந்தது.


நடிகர் சிவகார்த்திகேயனும் இதற்காக தனது கணடனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் ஜீவா கூறியிருப்பதாவது:.நம்ம தளபதியின் ஜன நாயகன் படம் சட்டத்துக்குப் புறம்பாக இணையத்தில் வெளியானதை அறிந்து மனம் நொந்துவிட்டது. தயவுசெய்து இந்தப் படத்தின் காட்சிகளைப் பகிர்ந்து அதற்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். காத்திருந்து, திரையரங்குகளில் மட்டுமே பார்த்து இதனைக் கொண்டாடுங்கள். இது வெறுமனே படம் மட்டுமே அல்ல - இது சில ஆண்டுகளாக தளராத ஆர்வத்துடன் பலரது வியர்வை, ரத்தம் சம்பந்தப்பட்டது. துரோகம் செய்யாதீர்கள்! இதைச் செய்தவர்கள் உடனடியாக அதன் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஜன நாயகன் தள்ளிப்போனதால், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் பொங்கல் வெறியாளராக நடிகர் ஜீவாவை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

« முந்தைய செய்தி (Previous)

LIK- திரை...
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI தவெக AMMK ADMK AIADMK TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி PMK கனமழை பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் பாமக முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் CONGRESS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் சட்டசபை தேர்தல் கைது ரஜினிகாந்த் தமிழகம் INDIAN CRICKET TEAM திருமாவளவன் COIMBATORE கோவை PARLIAMENT ELECTION இந்திய அணி EDAPPADI PALANISWAMI THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி அமமுக AJITH தமிழ்நாடு KEERTHY SURESH UDHAYANIDHI STALIN கொலை சீமான் வன்னியர் தென்காசி நெல்லை ஓபிஎஸ் TAMIL ACTRESS NELLAI SURIYA தேவர் ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM OPS அஜித் பாலியல் தொல்லை தூத்துக்குடி மதுரை MADURAI தீபாவளி BIGG BOSS TAMIL CSK ELECTION COMMISSION விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் PRIME MINISTER MODI NORTHEAST MONSOON சூர்யா கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் திருப்பரங்குன்றம்