POLLING 📊 TN ELECTION 2026

 

கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!

2 hours ago 10 ஏப்ரல் 2026 11:05 AM | views : 14

கும்பமேளா மூலம் பிரபலமான மோனலிசா போஸ்லே, 18 வயதுக்குள்பட்டவர் என விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரின் கணவரான ஃபர்மான் கான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில், கடந்தாண்டு (2025) மகா கும்பமேளாவில் மணிமாலை வியாபாரியான மோனலிசா போஸ்லே அழகு நட்சத்திரமாக இணையத்தில் பிரபலமானார்.


இதையடுத்து, அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.இவர் முகநூலில் அறிமுகமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஃபர்மான் (25) எனும் இளைஞரைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோனலிசா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மோனலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளத்தின் நெய்யடிங்கராவில் உள்ள அருமனூர் நாயனார் கோயிலில் மோனலிசா போஸ்லேவுக்கும் முகமது ஃபர்மானுக்கும் மார்ச் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.


இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், தந்தையுடன் செல்ல தனக்கு விருப்பமில்லை எனவும், தனக்கும் தனது காதலனுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் திருவனந்தபுரத்தின் தம்பனூர் காவல் நிலையத்தில் மோனலிசா கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, அப்போது மோனலிசா 18 வயது நிரம்பியவர் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவரை முகமது ஃபர்மானுடன் செல்ல அனுமதித்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.


இந்த நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையத்தினர் நடத்திய விசாரணையில் மோனலிசா 2009 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்றும், 18 வயது பூர்த்தியடையாத அவர் திருமணத்துக்கான போலியாக பிறப்புச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச காவல் துறையினர் ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மோனலிசாவின் கணவரான ஃபர்மான் கான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மோனலிசா 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று பிறந்தவர் என்றும், இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி அவரின் திருமணத்தின்போது அவருக்கு 16 ஆண்டுகள், 2 மாதங்கள், 12 நாள்கள் மட்டுமே ஆகியிருந்ததாக தேசிய பழங்குடியினர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கேரளம், மத்தியப் பிரதேச காவல் துறை தலைமை அதிகாரிகள் தில்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK ADMK ANBUMANI RAMADOSS MK STALIN AIADMK எடப்பாடி பழனிசாமி TAMIL NADU டிடிவி தினகரன் கனமழை பாராளுமன்ற தேர்தல் PMK TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பாமக முக ஸ்டாலின் காங்கிரஸ் CONGRESS அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கைது சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION கோவை தமிழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM COIMBATORE EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக தமிழ்நாடு பிரதமர் மோடி கொலை வடகிழக்கு பருவமழை திருமாவளவன் AJITH சீமான் ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN TAMIL ACTRESS ஓபிஎஸ் தென்காசி OPS நெல்லை NELLAI வன்னியர் தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM SURIYA அஜித் பாலியல் தொல்லை கள்ளக்காதல் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் CSK ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி MADURAI சூர்யா திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் மதுரை NORTHEAST MONSOON