POLLING 📊 TN ELECTION 2026

 

சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள்: புதுவையில் விஜய் பேச்சு

18 hours ago 04 ஏப்ரல் 2026 06:57 AM | views : 74

புதுவை தட்டாஞ்சவாடியில் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள். திமுக கூட்டணி வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம்.



புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை இரு கட்சிகளுமே நிறைவேற்றவில்லை. பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூடி சேர்ந்த கூட்டணி இல்லை; சேர்ந்திருக்க முடியாமல் சேர்ந்துள்ள கூட்டணி. நாம் யாரோடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டி உறவாடவில்லை. தில்லாக, கெத்தாக தனித்து நிற்கிறோம்

பொருந்தாத கூட்டணிக்கும், ஓட்டை உடைசல் கூட்டணிக்கும் ஓட்டு போட்டு தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள்.


ஒருத்தரை ஒருத்தர் முழுங்கி ஏப்பம் விடப் பார்க்கும் இந்த இரண்டு கூட்டணியும் உங்களுக்கு ஒன்றுமே செய்யாது. உங்களுக்கு நல்லாட்சி வேண்டும், நம்பிக்கையான ஆட்சி வேண்டும். அதனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்; பாஜக இருக்கும் கூட்டணியும் வேண்டாம். மக்களோடு மக்களாக நிற்கிற தவெக வேட்பாளர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடுங்கள். உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுவதாக நினைத்து ஓட்டு போடுங்கள். உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும். எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த விஜய் உங்களுக்கு துணை நிற்பான். தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் தவெக ஆட்சி அமைய வேண்டும்,” என்றார்.



தொடர்ந்து புதுவைக்கான வாக்குறுதிகளை அளித்து விஜய் கூறியதாவது:

துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழு மாநில அந்தஸ்து பெற முயற்சிப்போம்.

டிவிகே ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவி தொகையாக வழங்கப்படும்.



அரசு வேலைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கைது அன்புமணி ராமதாஸ் கனமழை காங்கிரஸ் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கோவை CONGRESS கொலை COIMBATORE திருமாவளவன் PARLIAMENT ELECTION தமிழ்நாடு சீமான் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM தீபாவளி இந்திய அணி EDAPPADI PALANISWAMI AJITH தென்காசி அமமுக பிரதமர் மோடி KEERTHY SURESH TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM OPS நெல்லை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN கொரோனா வடகிழக்கு பருவமழை NELLAI தேவர் நடிகை ஓபிஎஸ் அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி PRIME MINISTER MODI மதுரை வன்னியர் MADURAI CSK பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION SEEMAN விடுமுறை