POLLING 📊 TN ELECTION 2026

 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

12 hours ago 09 ஏப்ரல் 2026 06:56 AM | views : 17

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2015 செப்டம்பர் 1-ந் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி செய்து வரும் ஆசிரியர்கள் இத்தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தொடங்கியது.

இதை தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணி சான்றை விரைந்து வழங்க மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் தான் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பணி சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் நாளை (10-ந் தேதி) நிறைவு பெறுகிறது. அதனால் இதுவரையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெட் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI தவெக AMMK ADMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TTV DHINAKARAN கனமழை ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி AIADMK மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் கோவை முக ஸ்டாலின் CONGRESS தமிழக வெற்றிக் கழகம் கைது UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் COIMBATORE INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை இந்திய அணி வடகிழக்கு பருவமழை சீமான் KEERTHY SURESH தமிழ்நாடு அமமுக பிரதமர் மோடி AJITH தென்காசி EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS NELLAI நெல்லை தீபாவளி THIRUMAVALAVAN கொரோனா தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS OPS பாலியல் தொல்லை ஓபிஎஸ் BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் மதுரை MADURAI NORTHEAST MONSOON தூத்துக்குடி PRIME MINISTER MODI அஜித் விடுமுறை ELECTION COMMISSION CSK வன்னியர் கீர்த்தி சுரேஷ் தமிழக சட்டசபை தேர்தல்