POLLING 📊 TN ELECTION 2026

 

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்

12 hours ago 02 ஏப்ரல் 2026 07:31 AM | views : 81

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

சென்னை பெரம்பூர் தொகுதியில் கடந்த 30-ந்தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

பிரசார வாகனத்தில் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்து செல்லும் விஜயை கண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI MK STALIN TAMIL NADU ADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் கனமழை காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் சட்டசபை தேர்தல் கைது CONGRESS திருமாவளவன் PARLIAMENT ELECTION தமிழ்நாடு UDHAYANIDHI STALIN சீமான் கோவை கொலை இந்திய அணி அமமுக EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை தீபாவளி KEERTHY SURESH AJITH தென்காசி COIMBATORE TAMIL ACTRESS ஓபிஎஸ் NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் INDIAN CRICKET TEAM THIRUMAVALAVAN OPS தேவர் ASSEMBLY ELECTIONS விடுமுறை டாப் நியூஸ் திருப்பரங்குன்றம் CSK அஜித் டிரெண்டிங் பாலியல் தொல்லை இந்தியா கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH SEEMAN SURIYA தூத்துக்குடி ELECTION COMMISSION NORTHEAST MONSOON நடிகை PRIME MINISTER MODI மதுரை MADURAI