POLLING 📊 TN ELECTION 2026

 

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்

12 hours ago 30 மார்ச் 2026 07:19 AM | views : 100

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலை சந்திக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. நாம் தமிழர் கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.தவெகவும் அறிவித்துவிட்டது.


தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவர், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.



கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ்.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.



இதைபோல சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அவர் இன்று மாலை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார். வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அலுவலர் கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய். மு.க.ஸ்டாலினும், விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி AIADMK ADMK பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மு.க.ஸ்டாலின் PMK உதயநிதி ஸ்டாலின் பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை கோவை இந்திய அணி CONGRESS தமிழ்நாடு கொலை PARLIAMENT ELECTION சட்டசபை தேர்தல் கைது INDIAN CRICKET TEAM COIMBATORE UDHAYANIDHI STALIN திருமாவளவன் சீமான் அமமுக AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் தென்காசி தேவர் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS விடுமுறை அஜித் ELECTION COMMISSION கள்ளக்காதல் கொரோனா திருப்பரங்குன்றம் SEEMAN கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் நடிகை தூத்துக்குடி டிரெண்டிங் டாப் நியூஸ் CSK பாலியல் தொல்லை மதுரை OPS MADURAI PRIME MINISTER MODI SURIYA NORTHEAST MONSOON