POLLING FLAMES

 

சிலை முக்கியமா அல்லது அரசுப் பள்ளி கட்டிடங்களா? - அண்ணாமலை கேள்வி

4 months ago 11 டிசம்பர் 2025 08:22 AM | views : 287
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

"Out of Contact" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் வன்னியர் தமிழ்நாடு கைது OPS AJITH கொரோனா THIRUMAVALAVAN நெல்லை சட்டசபை தேர்தல் NELLAI SURIYA ஓபிஎஸ் TAMIL ACTRESS சூர்யா BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை CSK அஜித் கள்ளக்காதல் அன்புமணி RAJINIKANTH திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை மதுரை தூத்துக்குடி தென்காசி தீபாவளி