POLLING FLAMES

 

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்

5 months ago 08 நவம்பர் 2025 01:00 PM | views : 277
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் இரவு நேரத்தில் கோவில் முன் கடற்கரையில் தங்கி மறுநாள் காலை கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு செல்வது வழக்கம்.

இதனிடையே, திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த பக்தர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை கோவில் முன்பு கடற்கரையில் தங்க அனுமதியில்லை என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுத்தப்பட்டது. பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செயலுக்கு பக்தர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் விளக்கம் அளித்துள்ளார். வடகிழக்கு பருவமழை, திடீர் கனமழையின் காரணமாக அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK UDHAYANIDHI STALIN பாமக CONGRESS தமிழகம் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு பிரதமர் மோடி வன்னியர் AJITH OPS கைது KEERTHY SURESH சீமான் அமமுக தேவர் சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் கொரோனா நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் NELLAI SURIYA THIRUMAVALAVAN தென்காசி CSK அஜித் மதுரை தூத்துக்குடி கள்ளக்காதல் விடுமுறை பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் அன்புமணி தீபாவளி திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION