POLLING FLAMES

 

மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - பெற்றோர் கண்முன்னே பரிதாபம்

1 year ago 29 டிசம்பர் 2024 01:05 AM | views : 244
ஈரோடு,

ஈரோடு திண்டல் திருமலை கார்டன் வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவருடைய மகன் கவின்குமார் (வயது 25). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தல் அருகே வசித்து வந்த அவருடைய தாத்தா இறந்துவிட்டார். அதன் 3-ம் நாள் துக்க நிகழ்வுக்காக கவின்குமார் தனது தந்தை, தாய், அக்கா ஆகியோருடன் ஜர்த்தலில் உள்ள தாத்தா வீட்டுக்கு நேற்று முன்தினம் காரில் சென்று உள்ளார்.

பின்னர் அங்குள்ள காட்டுக்கொட்டாய் என்ற இடம் அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் துக்க வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் நடந்து சென்று கொண்டிருந்த கவின்குமாரை திடீரென மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட கவின்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH AJITH OPS பிரதமர் மோடி கைது தமிழ்நாடு சீமான் தேவர் வன்னியர் அமமுக நெல்லை சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா மதுரை ELECTION COMMISSION CSK வடகிழக்கு பருவமழை அன்புமணி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தீபாவளி விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அஜித் தென்காசி பாலியல் தொல்லை RAJINIKANTH