POLLING FLAMES

 

குந்தாணி என்றால் என்ன?

1 year ago 22 டிசம்பர் 2024 04:02 AM | views : 317
குந்தாணி என்பது நாம் உரலில் நெல்லு கம்பு சோளம் போன்ற தானியங்களை போட்டு குத்தும்போது உரலுக்கு மேலே குத்தும் போது தானியங்கள் சிதறாமல் இருக்கு ஓர் அகன்ற உரலை விட கொஞ்சம் வாயகன்ற மரத்தால் அல்லது மண்ணால் ஆன பாதுகாப்பு கவசம் குந்தாணி பண்டைய காலங்களில் மக்கள் அதிகம் உபயோகித்த பயன்பாட்டில் இருந்த ஓர் உன்னதமான அரிய பொருளே குந்தாணி

ஆனால் கொஞ்சம் குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்றும் அழைத்தனர் ஏன் அப்படின்னா உரலை விட அகன்ற வடிவில் இருப்பதால் உரல் உடுக்கை வடிவமாக இருக்கும் உரல் பெரும்பாலும் கல் கொண்டே செதுக்கினார்கள் மரத்தாலும் செய்வாங்க உரல்

இதில் குத்திய அரிசி போட்டு மாவும் இடிப்பார்கள் இதனுடன் பனங் கருப்பட்டி நன்கு காய்ச்சிய பாகு பதத்தில் சேர்த்து அரிசி மாவுடன் செய்வதே பச்சைமாவு

நன்றாக வறுத்த எள் பனங்கருப்பட்டி கொண்டு உரலில் இடித்தால் பத்து வீடு தள்ளி மணக்கும்முங்க
கோயில் விழாக்கள் பண்டிகைகள் என்றால் அன்றைய கிராமத்து வீடுகளில் விடிய விடிய உரலில் நெல் அரிசி குத்தும் வேலை அதிகம் இருக்கும்

இன்றும் புதிய வீடுகள் கட்டுபவர்கள் அம்மி ஆட்டுக்கல் உரல் அனைத்தும் வைக்கிறாங்க வீட்டுக்கு வெளியில்

ஒருகாலத்தில் மழைமாணி இது தானுங்க
உரல் அளவு மழை நீர் நிரம்பினால் ஓர் உழவு இரண்டு உழவு என்றும் அரை உரல் நிரம்பினால் அரை உழவு மழை என்றும் கணிப்பார்கள் ஊர் பெருசுகள்

கிராமத்தில் ஒரு பழமொழி இருக்குமுங்க முறை பெண்களை இப்படித்தாணுங்க சொல்லுவோம்

மாமன் புள்ளை மந்தாணி

அத்தை புள்ளை குந்தாணி

அந்த காலத்தில் பிரபலமாக இருந்த உரலும் குந்தாணியும் உலக்கையும் இப்போது எங்கே என்று தேட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய காலத்து மக்கள🙏🌳🌹😄 மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் வன்னியர் தேவர் KEERTHY SURESH பிரதமர் மோடி OPS தமிழ்நாடு AJITH TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக சீமான் கைது NELLAI நெல்லை THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS SURIYA தீபாவளி ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை அன்புமணி விடுமுறை தூத்துக்குடி தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் CSK மதுரை