POLLING FLAMES

 

வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!

1 year ago 02 டிசம்பர் 2024 11:44 AM | views : 218
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல், இடியுடன் கூடிய அதி கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாகவே ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.




நேற்று முன்தினம் திருவண்ணாமலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது, அதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் நேற்று தர்மபுரி நோக்கி நகர்ந்த நிலையில், இப்போது கர்நாடகாவிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஃபெஞ்சல் புயல் இப்பொழுது வழுவிழந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி இன்னும் சில நாள்களுக்கு மலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




புதுச்சேரியை பொருத்தவரை ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இடுப்பளவு நீரில் தத்தளித்து கொண்டிருந்த மக்களை படகுகளில் சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள், அவர்களை இப்போது தற்காலிக தங்குமிடத்தில் பத்திரமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை அரசு கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




இந்த சூழலில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஈடு கட்டும் வகையில், அங்கு குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூபாய் ஐயாயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் இது இன்றிலிருந்து வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புதுச்சேரியை பொறுத்தவரை இன்னும் ஓரிரு நாள்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் OPS வன்னியர் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தேவர் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை AJITH சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA கொரோனா திருப்பரங்குன்றம் அன்புமணி ELECTION COMMISSION தென்காசி மதுரை RAJINIKANTH கள்ளக்காதல் விடுமுறை CSK பாலியல் தொல்லை அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ்