Tamil News & POLLING

 

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை தெரியுமா?

1 year ago 27 நவம்பர் 2024 03:44 PM | views : 167
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டின் வட கிழக்கு பருவமழையின் முதல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




அதன்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 




இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




அதன்படி சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நாளை நாகை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK தமிழகம் பாமக PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் SEEMAN KEERTHY SURESH COIMBATORE தீபாவளி EDAPPADI PALANISWAMI கொலை வடகிழக்கு பருவமழை அமமுக கோவை சட்டசபை தேர்தல் கைது நெல்லை ஓபிஎஸ் AJITH கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை TAMIL ACTRESS விடுமுறை தமிழ்நாடு திருமாவளவன் THIRUMAVALAVAN தென்காசி திருநெல்வேலி THOOTHUKUDI NELLAI அஜித் NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் கீர்த்தி சுரேஷ் தேவர் கொரோனா வன்னியர் டிரெண்டிங் MADURAI தமிழக அரசு திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN வானிலை ஆய்வு மையம் OPS TAMIL CINEMA 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS