POLLING FLAMES

 

பெங்களூரு கட்டிட விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர்!

1 year ago 24 அக்டோபர் 2024 01:03 AM | views : 248
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையாவில் புதிதாக 6 மாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்தக் கட்டிடப் பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்திற்குள் வேலை பார்த்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஹெண்ணூர் போலீசார், மீட்பு படையினர் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகளை தொடங்கினர். கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

கட்டிட விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH AJITH OPS பிரதமர் மோடி கைது தமிழ்நாடு சீமான் தேவர் வன்னியர் அமமுக நெல்லை சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் மதுரை அன்புமணி ELECTION COMMISSION CSK வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தீபாவளி விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அஜித் தென்காசி பாலியல் தொல்லை RAJINIKANTH