POLLING FLAMES

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

1 year ago 29 செப்டம்பர் 2024 10:11 AM | views : 236
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு குறிப்பாக எதிரிகளை வீழ்த்தும் சத்ரு சம்ஹார பூஜை நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமானையும் தரிசிக்க வாய்ப்பு உளளதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK பாமக கனமழை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் CONGRESS PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக பிரதமர் மோடி தமிழ்நாடு OPS வன்னியர் AJITH KEERTHY SURESH கைது தேவர் சீமான் SURIYA கொரோனா BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் அஜித் கள்ளக்காதல் ELECTION COMMISSION அன்புமணி விடுமுறை மதுரை RAJINIKANTH பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் தீபாவளி திருப்பரங்குன்றம் தென்காசி CSK தூத்துக்குடி