POLLING FLAMES

 

சென்னையில் பிரமாண்ட விநாயகர் ஊர்வலத்திற்கு ஏற்பாடு - 1,300 சிலைகள் தயார் !

1 year ago 13 செப்டம்பர் 2024 07:27 AM | views : 253
சென்னை:

சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன.

இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளன.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சிலைகளை கரைப்பதற்கு கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை CONGRESS திருமாவளவன் COIMBATORE கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக OPS வன்னியர் பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு சீமான் தேவர் KEERTHY SURESH கைது தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS கொரோனா THIRUMAVALAVAN NELLAI ஓபிஎஸ் AJITH SURIYA தீபாவளி சூர்யா BIGG BOSS TAMIL RAJINIKANTH வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் தென்காசி கீர்த்தி சுரேஷ் அன்புமணி திருப்பரங்குன்றம் விடுமுறை CSK