POLLING FLAMES

 

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

1 year ago 10 செப்டம்பர் 2024 08:58 AM | views : 209
இம்பால்: மணிப்பூரில் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் சமீபத்திய வன்முறை சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிர வன்முறையின் காரணமாக, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் தௌபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






முன்னதாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்ட நீதிபதிகள் அந்தந்த மாவட்டங்களில் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவித்தனர். ஆனால், மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமமடைந்துள்ளதன் காரணமாக, ஊரடங்கு தளர்வு உத்தரவு இன்று காலை 11 மணி முதல் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஊடகங்கள், மின்சாரம், நீதிமன்றம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்கில் செப்டம்பர் 6ம் தேதி ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இதன் விளைவாக மணிப்பூரின் முதல் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங் சிங்கின் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.






செப்டம்பர் 7 ஆம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நீண்ட தூர ராக்கெட்டுகள் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதை குக்கி தீவிரவாதிகள் வீசியதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. மேலும், ஒருவரின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் நுழைந்து சுட்டுக் கொன்ற சம்பவமும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் ரோந்து மற்றும் வான்வழி ஆய்வு நடத்துவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே கபீப் கூறினார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இம்பால் பள்ளத்தாக்கில் மேதி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.







மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்