POLLING FLAMES

 

ஸ்காட்லாந்தை பொளந்த டிராவிஸ் ஹெட்.. மிரட்டல் உலக சாதனை!

1 year ago 04 செப்டம்பர் 2024 05:17 PM | views : 220
ஸ்காட்லாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி எடின்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து போராடி 20 ஓவரில் 154-9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 28, கேப்டன் பேரிங்டன் 23, மேத்தியூ க்ராஸ் 27 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக சீன் அபோட் 3, ஆடம் ஜாம்பா 2, சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து 155 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அறிமுக வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இருப்பினும் மற்றொரு நட்சத்திர துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் சுமாராக பந்து வீசிய ஸ்காட்லாந்து பவுலர்களை தாறுமாறாக அடித்து நொறுக்கினார். சாதாரணமாகவே அதிரடியாக விளையாடக் கூடிய அவர் கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து பவுலர்களுக்கு கருணை காட்டாமல் 17 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் 39 (12) ரன்கள் விளாசி அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 80 (25) ரன்களை 320 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இறுதியில் ஜோஸ் இங்லீஷ் 27* (13) ரன்கள் எடுத்ததால் 9.4 ஓவரிலேயே 156-3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. மறுபுறம் சுமாராக விளையாடிய ஸ்காட்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வாட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 6 ஓவர்களுக்குள் 73 ரன்கள் குவித்தார்.


இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2020ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங் 6 ஓவர்களுக்குள் 67 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு அசத்தலாக விளையாடிய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN பாமக காங்கிரஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI தமிழகம் கொலை திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் சீமான் OPS வன்னியர் கைது KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு அமமுக தேவர் சட்டசபை தேர்தல் SURIYA நெல்லை TAMIL ACTRESS BIGG BOSS TAMIL கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா ஓபிஎஸ் AJITH NELLAI THIRUMAVALAVAN மதுரை CSK தென்காசி பாலியல் தொல்லை கள்ளக்காதல் அஜித் வடகிழக்கு பருவமழை அன்புமணி விடுமுறை ELECTION COMMISSION RAJINIKANTH தூத்துக்குடி திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் தீபாவளி