Tamil News & POLLING

 

பாரிஸ் ஒலிம்பிக் - வினேஷ் போகத் மனு தள்ளுபடி!

1 year ago 14 ஆகஸ்ட் 2024 04:38 PM | views : 151
ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா இன்று (ஆக. 14) அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .

வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 3வது முறையாக நேற்று (ஆக. 13) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற கியூபாவைச் சேர்ந்த யுஸ்னெயிலிஸ் குஸ்மன் லோப்ஸ் (அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்றவர்) உடன் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என ஆகஸ்ட் 7ஆம் தேதி வினேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, 100 கிராம் எடை என்ற மிகச்சிறிய எடை வேறுபாடு, ஒலிம்பிக்கின் தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கம் பற்றி கேள்விகளை எழுப்புகிறது .

இரு நாள்களின் இரண்டாவது நாளில் குறைந்த அளவிலான எடை மிகுதிக்காக ஒரு வீராங்கனையை முழுவதுமாக தகுதிநீக்கம் செய்வது ஆழமான ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்புகிறது. வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK MK STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU ADMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் கனமழை CONGRESS UDHAYANIDHI STALIN PMK தமிழகம் சீமான் பாமக கொலை அன்புமணி ராமதாஸ் கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கோவை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் COIMBATORE வடகிழக்கு பருவமழை SEEMAN NELLAI ஓபிஎஸ் தமிழ்நாடு THIRUMAVALAVAN AJITH TAMIL ACTRESS மதுரை விடுமுறை திருமாவளவன் நெல்லை கள்ளக்காதல் திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் OPS NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் தேவர் 2024 T20 WORLDCUP அஜித் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS MADURAI வன்னியர் தமிழக அரசு டாப் நியூஸ் THOOTHUKUDI டிரெண்டிங்