POLLING FLAMES

 

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

1 year ago 16 ஜூலை 2024 08:52 AM | views : 216
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, ஒரு மாதத்திற்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கரூர் அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI சீமான் தேவர் பிரதமர் மோடி தமிழ்நாடு வன்னியர் OPS AJITH TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH அமமுக கைது SURIYA நெல்லை கொரோனா NELLAI ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN RAJINIKANTH பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் மதுரை தென்காசி கள்ளக்காதல் தீபாவளி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் CSK வடகிழக்கு பருவமழை விடுமுறை தூத்துக்குடி அஜித் அன்புமணி