POLLING FLAMES

 

திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைத்தாலும் அது சாத்தியமே - ஆளுநர் அர்லேகர்

17 hours ago 07 மே 2026 05:00 PM | views : 51

திமுக கூட்டணியில் இருந்து தாவிய காங்கிரஸ் வைத்திருக்கும் 5 இடங்களை சேர்த்து விஜய்யின் தவெகவிடம் 113 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க பெரும்பான்மையான 118 இடங்களுக்காக திமுக கூட்டணியில் மீதம் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.


அவர்கள் பிடிகொடுக்காமல் பேசுவதால் இழுபறி நீடிக்கிறது. 118 எம்எல்ஏக்களின் பெயர்களை கொடுத்தால் தான் ஆட்சியமைக்க அழைப்பேன் என தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இன்று இரண்டாவது முறையாக விஜய் சென்று சந்தித்தபோதும் ஆளுநர் பெரும்பான்மையை கொண்டு வரவே வலியுறுத்தி வழியனுப்பி வைத்துள்ளார்.


இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு ஆளுநர் அர்லேகர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பேட்டியில் அவர் கூறியதாவது, "மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது.


118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை, விஜய் பதவியேற்பை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்?. விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார். அடுத்த 3 நாட்களுக்கு இப்படியே நீடித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அதிமுக, திமுக இணைந்து ஆட்சியமைக்க கோரவும் அரசியலமைப்புப்படி சாத்தியமே என்று கேள்வி ஒன்றுக்கு அவர் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் இந்திய அணி ரஜினிகாந்த் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS PMK தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM கனமழை UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கோவை பாமக CONGRESS திருமாவளவன் கொலை தமிழகம் COIMBATORE முக ஸ்டாலின் EDAPPADI PALANISWAMI கைது பிரதமர் மோடி OPS தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை தமிழ்நாடு NELLAI KEERTHY SURESH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM SURIYA வன்னியர் தேவர் சீமான் அன்புமணி ராமதாஸ் கொரோனா RAJINIKANTH TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் சூர்யா BIGG BOSS TAMIL AJITH PARLIAMENT ELECTION ஓபிஎஸ் THIRUMAVALAVAN CSK திருப்பரங்குன்றம் தென்காசி தீபாவளி அஜித் கீர்த்தி சுரேஷ் நடிகை விடுமுறை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அன்புமணி ELECTION COMMISSION நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை மதுரை கள்ளக்காதல்