POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

3 days ago 13 ஏப்ரல் 2026 04:57 PM | views : 32

முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக வீரர் பிரஃபுல் ஹிஞ்ச் ஐபிஎல் தொடரில் வரலாறு படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது.


ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்; வரலாற்றுச் சாதனை!217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரஃபுல் ஹிஞ்ச் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.


வைபவ் சூர்யவன்ஷி (0 ரன்), துருவ் ஜுரெல் (0 ரன்) மற்றும் லுஹான் டி பிரிடோரியஸ் (0 ரன்) மூவரின் விக்கெட்டினையும் வீழ்த்தி அசத்தினார் பிரஃபுல் ஹிஞ்ச். ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரில் வீரர் ஒருவர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறை.ஐபிஎல் வரலாற்றில் 32 முறை ஆட்டத்தின் முதல் ஓவரில் பந்துவீச்சாளரால் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக TVK BJP AMMK தவெக ADMK TTV DHINAKARAN ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS TAMIL NADU டிடிவி தினகரன் PMK கனமழை AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் பாமக அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் திருமாவளவன் இந்திய அணி CONGRESS தமிழகம் கோவை கைது சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் அமமுக NELLAI INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION நெல்லை OPS வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI சீமான் தேவர் பிரதமர் மோடி KEERTHY SURESH கொலை COIMBATORE வன்னியர் மதுரை TAMIL ACTRESS AJITH SURIYA தமிழ்நாடு தென்காசி THIRUMAVALAVAN ஓபிஎஸ் கள்ளக்காதல் பாலியல் தொல்லை அஜித் CSK அன்புமணி தீபாவளி தூத்துக்குடி NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் BIGG BOSS TAMIL விடுமுறை கொரோனா கீர்த்தி சுரேஷ் தமிழக சட்டசபை தேர்தல் PRIME MINISTER MODI ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION MADURAI TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா