POLLING FLAMES

 

புழல் ஏரியில் மூன்று நாட்களில் 3 அடி தண்ணீர் உயர்ந்தது

1 year ago 17 அக்டோபர் 2024 09:16 AM | views : 212
பூந்தமல்லி:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சோழவரத்தில் 30 செ.மீட்டரும், செங்குன்றத்தில் 28 செ.மீட்டர் மழையும் பதிவானது. பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

புழல் ஏரியில் மட்டும் கடந்த 3 நாட்களில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. கடந்த 14-ந்தேதி நிலவரப்படி புழல் ஏரியில் 14.97 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 16.90 அடியாக பதிவானது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில் 2,388 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 72 சதவீதம் ஆகும். ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 936 கனஅடியாக குறைந்து உள்ளது.

பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகபட்சமாக 1380 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை ஏரிக்கு 493 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 13.79 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில்1317 மி.கன அடி நீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 134 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை நின்றாலும் ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வரும் நாட்களில் அதிக அளவில் மழை பொழிந்து, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே, ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சோழவரம் ஏரிக்கு 498 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 198 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 750 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் 3231 மி.கனஅடியில் 450 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு வெறும் 10 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்தம் உள்ள 500 மி.கனஅடியில் 309 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி TAMIL NADU UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK காங்கிரஸ் கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் CONGRESS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் கோவை அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION தமிழகம் கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தேவர் சீமான் தமிழ்நாடு OPS அமமுக KEERTHY SURESH வன்னியர் THIRUMAVALAVAN TAMIL ACTRESS BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் AJITH NELLAI நெல்லை கொரோனா சட்டசபை தேர்தல் சூர்யா ஓபிஎஸ் தீபாவளி கைது SURIYA வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION CSK மதுரை தென்காசி அன்புமணி தூத்துக்குடி RAJINIKANTH விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல்