Tamil News & POLLING

 

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்ணம்மா… காரணம் இதுதானா?

4 years ago 26 அக்டோபர் 2021 05:24 AM | views : 165
சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி வலம் வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டத்தளத்தை கொண்டுள்ளது. தற்போது விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணமாகவாக நடித்து வந்த ‘ரோஷினி ஹரிப்ரியன்’ சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். இது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்திள்ளது.


இந்நிலையில், நடிகை ‘ரோஷினி ஹரிப்ரியன்’ பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கிய ரோஷினி கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 23) சூட்டிங்கில் கலந்து இருக்கிறார். பின் அன்றுதான் தனது கடைசி நாள் என்று கூறி தான் சீரியலில் விடை பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாமாகவே வாழ்ந்து கொண்டிருந்த ரோஷினி தீடிரென சீரியலில் விலக காரணம் என்ன ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்த நிலையில், ‘அருக்கு இந்த சீரியல் மூலம் சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக அவர் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் ரோஷினியின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் இது தொடர்பாக பேசியுள்ள ரோஷினியின் நண்பர் ஒருவர், சீரியல் மூலம் ரோஷினிக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான். ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் ஏற்றுக் இருந்தார்.


இந்தநிலையில் தான் அவரை சில பெரிய பேனரில் இருந்து கேட்டு வந்தார்கள். தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் குழைக்கும். இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார். கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.


பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோயின் ரோஷினி விலகுவது பாரதிகண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த சீரியல் டிஆர்பி இனி முன்னிலை வகிப்பது சந்தேகம் தான்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK AIADMK டிடிவி தினகரன் TAMIL NADU ADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN காங்கிரஸ் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் PMK தமிழகம் சீமான் கனமழை UDHAYANIDHI STALIN CONGRESS பாமக கொலை கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக SEEMAN சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை தீபாவளி கோவை KEERTHY SURESH COIMBATORE NELLAI ஓபிஎஸ் திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH கள்ளக்காதல் மதுரை நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு விடுமுறை தென்காசி THIRUMAVALAVAN திருமாவளவன் டிரெண்டிங் தேவர் தமிழக அரசு அஜித் NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் OPS நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் MADURAI THOOTHUKUDI வானிலை ஆய்வு மையம் வன்னியர்