Tamil News & POLLING

 

கன்னியாகுமரியில் கனமழை! 2 பேர் பலி; கலெக்டருடன் முதல்வர் அவசர ஆலோசனை

4 years ago 17 அக்டோபர் 2021 05:16 PM | views : 156
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் இரவு, நேற்று பகல் பொழுதிலும் விடாமல் பெய்த மழை நேற்று இரவு முழுவதும் நீடித்தது.


தொடரும் மழை காரணமாக பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக திக்குறிச்சி- மார்தாண்டம் சாலை, குழித்துறை- மேல்புறம் சாலைகள் துண்டிக்கப்பட்டன. திக்குறிச்சி, குழித்துறை, வைக்கலூர், முஞ்சிறை, மங்காடு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். மழை காரணமாக குழித்துறை பகுதியில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து பொருட்களை மீட்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட கலெக்டர் அரவிந்த்குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஒருவர் காணாமல் போயிருக்கிறார். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜெபின்(17) குழித்துறை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார். குறும்பனை பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் நிஷான் அருகில் உள்ள வள்ளியாறு பகுதியில் குளித்த போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கீரிப்பாறை பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் தொழிலாளி சித்திரவேல் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 216.6 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. சிற்றார் 1 பகுதியில் 204.2 மி.மீ மழையும், சிவலோகம் பகுதியில் 194.6 மி.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 45.71 அடி தண்ணீர் நிரம்பியிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 75.85 அடி தண்ணீர் நிரம்பியிருக்கிறது.


திற்பரப்பு அருவிக்கு மேல் பகுதியில் தண்ணீர் பெருக்குதாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீர் புகுந்த வீடுகளில் உள்ள மக்களை படகுகளில் மீட்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்துடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் MK STALIN TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM பாமக ரஜினிகாந்த் கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION SEEMAN வடகிழக்கு பருவமழை தீபாவளி கைது சட்டசபை தேர்தல் அமமுக COIMBATORE EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கோவை விடுமுறை NELLAI கள்ளக்காதல் மதுரை நெல்லை TAMIL ACTRESS AJITH திருமாவளவன் தமிழ்நாடு THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி தென்காசி டிரெண்டிங் திருப்பரங்குன்றம் அஜித் டாப் நியூஸ் MADURAI THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் தேவர் வானிலை ஆய்வு மையம் நாடாளுமன்ற தேர்தல் ELECTION COMMISSION நடிகை OPS வன்னியர் தமிழக அரசு ASSEMBLY ELECTIONS