Tamil News & POLLING

 

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்..!

3 months ago 18 டிசம்பர் 2025 04:21 PM | views : 195
பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருவதால், பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிகார் தலைமைச் செயலகத்தில், கடந்த டிச.15 அன்று நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதீஷ் குமார் வலுக்கட்டாயமாக விலக்கினார்.

பிகார் முதல்வரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நிதீஷ் குமாரின் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிகார் முதல்வருக்கு எதிராக சில சமூக விரோதிகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன், பாகிஸ்தானைச் சேர்ந்த நிழல் உலக தாதா ஒருவர் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், முக்கிய பிரமுகர்களை மட்டுமே அவர் அருகில் அனுமதிக்க வேண்டுமெனவும், அதிகாரிகளுக்கு பிகார் காவல் துறை டிஜிபி வினய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.இத்துடன், பிகாரில் செயல்படும் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் ADMK AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் கனமழை CONGRESS இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் INDIAN CRICKET TEAM பாமக கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை அமமுக COIMBATORE EDAPPADI PALANISWAMI கைது KEERTHY SURESH சட்டசபை தேர்தல் கோவை தீபாவளி திருநெல்வேலி ஓபிஎஸ் SEEMAN தமிழ்நாடு கள்ளக்காதல் TAMIL ACTRESS NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN திருமாவளவன் AJITH மதுரை தென்காசி விடுமுறை தேவர் MADURAI மழை வன்னியர் OPS கீர்த்தி சுரேஷ் நடிகை டிரெண்டிங் 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் அஜித் தமிழக அரசு பாலியல் தொல்லை THOOTHUKUDI ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம்