POLLING FLAMES

 

கார்த்திக் சர்மாவை நினைத்து பெருமைப்படுகிறோம்; சிஎஸ்கே பயிற்சியாளர் பாராட்டு!

1 hour ago 03 மே 2026 09:37 AM | views : 5

இளம் வீரர் கார்த்திக் சர்மா விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் கார்த்திக் சர்மாவின் அரைசதங்களால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில், இளம் வீரர் கார்த்திக் சர்மா விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் அவரைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸில் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடியிருந்தாலும், மிகப் பெரிய போட்டிகளில் அவர்களை எப்படி அறிமுகப்படுத்தப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம்.


இளம் வீரர்களின் மனநிலையை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். சென்னை சூப்பர் கிங்ஸில் கார்த்திக் சர்மாவை அறிமுகம் செய்தபோது, அவருக்கு ரன்கள் குவிப்பது எளிதாக இருக்கவில்லை. அதன் பின், அவர் கடினமாக உழைத்தார். அதற்கான பலன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கிடைத்துள்ளது.


கார்த்திக் சர்மா சிறப்பான வீரர். அவர் திறமை வாய்ந்த வீரர் என்பதன் காரணத்தினாலேயே ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டார். நாளுக்கு நாள் அவருடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடிய விதத்தை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.


நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த பின், அனுபவம் வாய்ந்த ஷிவம் துபே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் இருக்கும்போது, இளம் வீரர் கார்த்திக் சர்மா அவர்களுக்கு முன்பாக களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் PMK AIADMK பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக கனமழை முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN தமிழகம் இந்திய அணி PARLIAMENT ELECTION CONGRESS கோவை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE கொலை அன்புமணி ராமதாஸ் AJITH பிரதமர் மோடி கைது சீமான் தமிழ்நாடு OPS INDIAN CRICKET TEAM அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH கொரோனா சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி நெல்லை NELLAI BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் விடுமுறை CSK வடகிழக்கு பருவமழை தேவர் ELECTION COMMISSION அஜித் தென்காசி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் SURIYA RAJINIKANTH தூத்துக்குடி மதுரை வன்னியர் சூர்யா