POLLING 📊 TN ELECTION 2026

 

நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு !!

4 years ago 28 செப்டம்பர் 2021 04:32 PM | views : 174
நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் வருகிற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுளள்ளது. தேர்தலுக்கு ஆயத்தமாக 29.09.2021 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.



ஆகையால் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக நாளை (அக்.29) அனைத்து வகை பள்ளிகளுக்கும் (CBSE பள்ளிகள் நீங்கலாக) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல உள்ளதால், நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக BJP பாஜக சென்னை CHENNAI அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU TTV DHINAKARAN AIADMK ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் PMK மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாமக தமிழகம் காங்கிரஸ் கைது அன்புமணி ராமதாஸ் கனமழை கோவை ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் CONGRESS PARLIAMENT ELECTION தமிழ்நாடு கொலை திருமாவளவன் UDHAYANIDHI STALIN COIMBATORE சீமான் இந்திய அணி KEERTHY SURESH பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM அமமுக AJITH தென்காசி தீபாவளி OPS TAMIL ACTRESS தேவர் THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS CSK திருப்பரங்குன்றம் SEEMAN தமிழக சட்டசபை தேர்தல் நடிகை மதுரை கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI கொரோனா ஓபிஎஸ் தூத்துக்குடி கள்ளக்காதல் ELECTION COMMISSION அஜித் வன்னியர் பாலியல் தொல்லை