POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

வாக்குப்பதிவு நாளில் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்

3 hours ago 20 ஏப்ரல் 2026 03:52 PM | views : 22

கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு தற்போதே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


சுற்றுலா பயணிகள் இங்கு இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசித்தாலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். கொடைக்கானல் மேல் மலை கிராமமான மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், இயற்கை எழில் காட்சி பகுதிகள், கூக்கால் ஏரி, அப்பர் லேக் வியூ, பசுமை பள்ளத்தாக்கு, பாம்பார் அருவி, பூம்பாறை செல்லும் சாலையான பழனி எழில் காட்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே முன்னேற்பாடாக கொடைக்கானலை சுற்றியுள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் PMK MK STALIN உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் AIADMK பாராளுமன்ற தேர்தல் பாமக அன்புமணி ராமதாஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் CONGRESS கோவை இந்திய அணி திருமாவளவன் தேவர் சட்டசபை தேர்தல் தமிழகம் சீமான் முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி COIMBATORE கைது ரஜினிகாந்த் வன்னியர் THIRUMAVALAVAN OPS INDIAN CRICKET TEAM கொலை அமமுக KEERTHY SURESH மதுரை TAMIL ACTRESS தென்காசி PARLIAMENT ELECTION நெல்லை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM கொரோனா வடகிழக்கு பருவமழை SURIYA தமிழ்நாடு AJITH ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அஜித் தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி விடுமுறை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை மோடி ELECTION COMMISSION சூர்யா ASSEMBLY ELECTIONS BIGG BOSS TAMIL CSK PRIME MINISTER MODI