POLLING 📊 TN ELECTION 2026

 

டெல்லி சட்டமன்ற வளாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கார் - மர்ம நபரால் பரபரப்பு

8 hours ago 06 ஏப்ரல் 2026 11:01 AM | views : 12

டெல்லி சட்டசபை வளாகத்திற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றில் வந்த நபர், மதியம் 2 மணியளவில் சட்டசபை வளாகத்தின் 2-வது நுழைவு வாயில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அந்த நபர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அங்கிருந்த வரவேற்பு பகுதிக்கு அருகே ஒரு பூங்கொத்தை வைத்துவிட்டு, உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, டெல்லி சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே டெல்லியில் உள்ள கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விடுக்கப்பட்ட சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP TVK அண்ணாமலை AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN TAMIL NADU TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி கனமழை காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் AIADMK பாமக உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் சட்டசபை தேர்தல் CONGRESS ரஜினிகாந்த் கைது UDHAYANIDHI STALIN சீமான் இந்திய அணி INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் தமிழ்நாடு COIMBATORE பிரதமர் மோடி கொலை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH தென்காசி தீபாவளி AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI OPS TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை NELLAI ASSEMBLY ELECTIONS தேவர் வன்னியர் MADURAI அஜித் CSK PRIME MINISTER MODI ஓபிஎஸ் கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி மதுரை விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் SEEMAN நடிகை கொரோனா