தல தோனிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் MS தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
"உங்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு விசில் சத்தத்தில் இருந்தும், நீங்கள் கவர்ந்த எண்ணற்ற இதயங்கள் வரை, உங்களது இந்த வாழ்நாள் பயணம் தமிழகத்தின் விளையாட்டு உணர்வோடு பிரிக்க முடியாத ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமது 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது அசாத்தியமான கிரிக்கெட் சாதனைகளும், இக்கட்டான சூழலிலும் பதற்றமில்லாத அமைதியான தலைமைப் பண்பும், எளிமையான குணமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் பலரையும் ஊக்கமளித்து வருகிறது. நீங்கள் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், இன்னும் பல ஆண்டுகள் தொடர் வெற்றிகளைக் குவிக்கவும் வாழ்த்துகிறேன். உங்களுக்காக ஒலிக்கும் விசில் சத்தங்கள் இன்னும் சத்தமாகப் பெருகட்டும்!" என்று முதல்வர் விஜய் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.