Wimbledon Tennis: பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து காலிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்து வருகின்றன.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான கோகோ காப் உடன் மோதினார்.
ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிரடியாக விளையாடிய கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா தொடரில் இருந்து வெளியேறினார். இவர் நான்காவது சுற்றில் சக நட்டு வீராங்கனையான இவா ஜோவிக்கை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முசோவா உடன் மோதுகிறார்.