Tamil News & POLLING
சென்னை, சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், 'சென்சார்' பிரச்சினையால் படம் இன்று வரை வெளியாகவில்லை. தொடர்ந்து...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியாகும். இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். ...
சென்னை, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்தகட்டமாக, வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள்...
மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா? தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளும், கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி...
சென்னை, 2026 தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்...
சென்னை, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். ...
சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான...
சென்னையில் விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபையில் காங்கிரஸ் முதன்மை கொறடா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் என பதவிகளை துறந்து, பா.ஜனதாவில் சேர்ந்தேன். அந்தநேரம், நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது.அதனால், நிச்சயம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்று கூறப்பட்டது. முதல் வேட்பாளர்கள் பட்டியலில் என்...
தமிழ்நாடு சார்பில் ஐபிஎல்லில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்களே இல்லாததால், உடனடியாக இந்த அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சென்னை சூப்பர்...
2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிகாக மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள்...