Tamil News & POLLING

 

எதற்கும் பயப்படமாட்டேன் சமரசமே கிடையாது : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

2 years ago 14 டிசம்பர் 2023 01:07 PM | views : 161
முதுகுக்கு பின்னால் யார் யார் என்னென்ன பேசுகிறீர்கள் என்று தனக்குத் தெரியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுக்குழுவில் சீறியிருக்கிறார்.

தன்னை பற்றி முதுகுக்கு பின்னால் இல்லாததும் பொல்லாததும் சிலர் பேசுவதை தெரிந்தும் தாம் பொறுமையாக எதுவும் தெரியாதது போலவே இருப்பதாக ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு காரணம் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே தவிர வேறு இல்லை எனத் தெரிவித்தார். தன்னை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவியை முள் கிரீடமாகவே பார்க்கிறேன் என்றும் தனக்கு பொறுப்புகள் கூடியிருப்பதால் தாம் டென்ஷனாக இருக்கிறேன் எனவும் பேசினார்.

ஆனால் ஒன்றை மட்டும் தேமுதிகவினர் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டு பேசிய பிரேமலதா, அரசியலில் தாம் எதற்கும் பயப்படமாட்டேன் என்றும் சவால் என்று வந்துவிட்டால் சவால் தான் சமரசமே கிடையாது எனவும் ஆவேசம் காட்டினார். தன்னுடன் கட்சிக்காக சேர்ந்து உழைக்க நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தன்னிடம் யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

கட்சி தொடர்புடைய எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நிர்வாகிகள் தன்னிடம் நேரடியாக டிஸ்கஸ் நடத்தலாம் என்றும் இடையே குறுக்கீடே இருக்காது என்ற உறுதியையும் அளித்துள்ளார். இதன் மூலம் தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகள் சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். தொண்டனாக இருந்தாலும் சரி, நிர்வாகிகளாக இருந்தாலும் சரி நேரடியாக தன்னை சந்தித்து பேசலாம் என்றும் தேமுதிகவினரை முக்கிய பொறுப்புகளில் அமர வைக்கும் வரை தாம் ஓயமாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.

தேமுதிகவினர் உண்மையாக, ஒற்றுமையாக கட்சிக்கு உழைக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தேமுதிகவை ஆட்சியில் அமர வைக்கும் நாள் தான் விஜயகாந்தின் லட்சியம் நிறைவேறிய நாளாக அமையும் எனப் பேசினார்
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK AIADMK டிடிவி தினகரன் TAMIL NADU ADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN காங்கிரஸ் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் PMK தமிழகம் சீமான் கனமழை UDHAYANIDHI STALIN CONGRESS பாமக கொலை கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக SEEMAN சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை தீபாவளி கோவை KEERTHY SURESH COIMBATORE NELLAI ஓபிஎஸ் திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH கள்ளக்காதல் மதுரை நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு விடுமுறை தென்காசி THIRUMAVALAVAN திருமாவளவன் டிரெண்டிங் தேவர் தமிழக அரசு அஜித் NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் OPS நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் MADURAI THOOTHUKUDI வானிலை ஆய்வு மையம் வன்னியர்