Tamil News & POLLING

 

பழனிசாமியும், ஸ்டாலினும் வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் :டிடிவி தினகரன்

4 years ago 01 நவம்பர் 2021 01:26 PM | views : 178
டிடிவி தினகரன் அவர்கள்‌ அன்றைக்கு எழுப்பிய சந்தேகம்‌ இப்போது சென்னை உயர்நீதிமன்றத்‌ தீர்ப்பின்‌ மூலம்‌ உறுதியாகி இருக்கிறது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய இத்தகைய புரிதலோ, பக்குவமோ, தெளிவோ எதுவுமில்லாமல்‌ பச்சை சுயநலத்தோடு உள்‌ இட ஒதுக்கீட்டைக்‌ கொண்டுவந்து, சாதி மாச்சர்யங்கள்‌ இன்றி அண்ணன்‌- தம்பிகளாக பழகி வந்த மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவைச்‌ சேர்ந்த பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பையும்‌, பகைமையையும்‌ பழனிசாமி ஏற்படுத்தினார்‌.

அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாக வன்னியர் உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்தது என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்த எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக கழக துணைபொதுச்செயலாளர் செந்தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வாக்குவங்கி அரசியலுக்காக அவசரகதியில்‌ அள்ளித்தெளித்த கோலமாக முந்தைய பழனிசாமி அரசு கொண்டுவந்து, தற்போதைய ஸ்டாலின்‌ அரசும்‌ ஆராயாமல்‌ செயல்படுத்திய 10.5% உள்‌ இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம்‌ ரத்து செய்திருக்கிறது.

இந்த இருவரின்‌ சுயநலத்தாலும்‌, கபட நாடகத்தாலும்‌ இட ஒதுக்கீட்டைப்‌ பின்பற்றி கல்லூரிகளில்‌ சேர்ந்த வன்னியர்‌ சமூகத்தைச்‌ சேர்ந்த மாணவச்செல்வங்கள்‌ மட்டுமல்ல; திடீர்‌ இட ஒதுக்கீட்டால்‌ இடம்‌ கிடைக்காமல்‌ போன 148 பிரிவிலுள்ள பல்வேறு சமூகங்களைச்‌ சேர்ந்தவர்களும்‌ பாதிக்கப்பட்டிருப்பதுதான்‌ கண்ட பலன்‌. இந்த இட ஒதுக்கீட்டின்‌ மூலம்‌ அரசு வேலைவாய்ப்புகளில்‌ சேர்ந்தவர்களுக்கும்‌, இதனால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கும்‌ இதே நிலைமைதான்‌.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI MK STALIN ADMK AIADMK AMMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM இந்திய அணி ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் சீமான் கனமழை PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக CONGRESS PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI அமமுக கைது SEEMAN கோவை COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI மதுரை THOOTHUKUDI தமிழ்நாடு THIRUMAVALAVAN திருமாவளவன் நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS தென்காசி OPS AJITH விடுமுறை கள்ளக்காதல் திருநெல்வேலி 2024 T20 WORLDCUP MADURAI ஓபிஎஸ் கொரோனா டிரெண்டிங் வன்னியர் டாப் நியூஸ் NORTHEAST MONSOON அஜித் TAMIL CINEMA ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN வானிலை ஆய்வு மையம் திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் தமிழக அரசு ELECTION COMMISSION தேவர்