Tamil News & POLLING

 

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி.. கொரோனா தொற்றால் காலமானார்

4 years ago 17 மே 2021 01:15 AM | views : 160
இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்று காரணமாக சற்று நேரத்திற்கு முன் காலமானார். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்த்தார். இதுமட்டுமின்றி இவர் பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில், இவர் எழுதிய நெருப்புடா பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ள இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018இல் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இவர் கடந்த 2019இல் இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உதயநிதி கதாயநாயகான நடித்து வருகிறார்.

கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அருண்ராஜா காமராஜாவின் மனைவிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்து. இந்நிலையில், அவரது மனைவி கொரோனா தொற்று காரணமாகச் சற்று நேரத்திற்கு முன் காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK TAMIL NADU TTV DHINAKARAN ADMK AIADMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN காங்கிரஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS CONGRESS சீமான் INDIAN CRICKET TEAM தமிழகம் ரஜினிகாந்த் PMK கனமழை UDHAYANIDHI STALIN இந்திய அணி பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கொலை பிரதமர் மோடி கைது அமமுக தீபாவளி வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH கோவை EDAPPADI PALANISWAMI SEEMAN நெல்லை கள்ளக்காதல் தென்காசி NELLAI மதுரை TAMIL ACTRESS தமிழ்நாடு விடுமுறை திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் THIRUMAVALAVAN ஓபிஎஸ் AJITH NORTHEAST MONSOON தேவர் வன்னியர் OPS டாப் நியூஸ் டிரெண்டிங் திருப்பரங்குன்றம் MADURAI கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP அஜித் வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு ELECTION COMMISSION THOOTHUKUDI ASSEMBLY ELECTIONS