Tamil News & POLLING

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி; பழனிசாமி பதவி விலக வேண்டும்!

4 years ago 14 அக்டோபர் 2021 03:10 AM | views : 182
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ள நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி பதவி விலக வேண்டுமென அக்கட்சியின் முன்னாள் செய்திதொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து நேற்று மாலை அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான் முன்பே கூறியது போல் 80 சதவீதம் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் தோல்வி மிகுந்த வேதனையளிக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இயக்கமாக இருந்த அதிமுக தேய்ந்து வருகிறது. கட்சி இயக்கம் முற்றிலும் சிதைந்துள்ளது.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீதான அதிருப்தியால் தான், திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் கூட அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் செல்லி, நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று அறிக்கை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் திமுக கொல்லைபுறமாக வந்து வென்று விட்டார்கள் என்று சொல்லி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை.

அதிமுக நன்மை அடைய வேண்டுமெனில் பழனிசாமி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். பழனிசாமி வெளியே சென்றால் தான்கட்சியை காப்பாற்ற முடியும். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், கட்சிக்கும் அவர் துரோகம் செய்துள்ளார்.

அதிமுக தோல்வியின் காரணமாக தொண்டர்கள் துவன்டு போய் உள்ளனர். ஓ.பி.எஸ்ஸை நினைத்து நான் வேதனை படுகிறேன். இன்னும் கட்சியின் மீது பற்றோ, வேகமோ இல்லாவிட்டால், புதுச்சேரியில் அதிமுக பூஜ்ஜியமாகிவிட்டது போல, தமிழகத்திலும் சரிவை சந்திக்கும். பழனிசாமியை ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்றால், தொடர்ந்து அதிமுக தோல்விஅடையும். பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தாமாகவே கட்சியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்துவேன். கட்சியை காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றார்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM PMK சீமான் தமிழகம் பாமக CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI கைது அமமுக கோவை தீபாவளி COIMBATORE PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை NELLAI நெல்லை SEEMAN ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH TAMIL ACTRESS THIRUMAVALAVAN திருமாவளவன் மதுரை திருநெல்வேலி விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி கள்ளக்காதல் தமிழக அரசு டிரெண்டிங் டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS அஜித் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் OPS தேவர் வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI 2024 T20 WORLDCUP வன்னியர் MADURAI