Tamil News & POLLING

 

ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்! ரூ.1 கோடி வாங்கி திரும்ப செலுத்த மறுப்பு!

4 years ago 14 அக்டோபர் 2021 02:12 AM | views : 156
பாஜகவின் செயற்குழு உறுப்பினரான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டிலுள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.


இவர் இந்த வீடு வாங்குவதற்காக கடந்த 2016 ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ருபாய் கடன் பெற்றுள்ளார். வீட்டை வாங்கிய பிறகு சில தவணைகள் மட்டும் வட்டி கட்டி அதன் பின்னர் தவணை பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டிப்பணம் கட்ட சொல்லியும் மதுவந்தி பணம் கட்டமால் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன்- அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டுச் சாவி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுவந்தியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, "தனது வீட்டை அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என்றும் இது தவறான தகவல் என்றும் மேலும் இது குறித்து பேச விரும்பவில்லை" எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே தனியார் பள்ளியில் சீட்டு வாங்கித் தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடிக்கு ரூபாய்க்கும் மேல் பணத்தை பெற்று திருப்பி கட்டாத காரணத்தினால் அவரது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AIADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ADMK உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK தமிழகம் இந்திய அணி கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM பாமக சீமான் கொலை பிரதமர் மோடி CONGRESS அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் தீபாவளி EDAPPADI PALANISWAMI கோவை கைது PARLIAMENT ELECTION COIMBATORE அமமுக வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH THIRUMAVALAVAN கள்ளக்காதல் மதுரை தென்காசி ஓபிஎஸ் AJITH விடுமுறை SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS நெல்லை தமிழ்நாடு திருநெல்வேலி NELLAI திருமாவளவன் NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை வன்னியர் திருப்பரங்குன்றம் MADURAI THOOTHUKUDI தேவர் வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் டிரெண்டிங் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP தமிழக அரசு மழை ASSEMBLY ELECTIONS OPS அஜித்