Tamil News & POLLING

 

கடைசிப்போட்டி சென்னையில்தான் : சி.எஸ்.கே. கேப்டன் தோனி!

4 years ago 05 அக்டோபர் 2021 04:43 PM | views : 157
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமாகியவர் மகேந்திர சிங் தோனி. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றிகரமாக ஆடி வருகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சென்னை அணி முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், சென்னை ரசிகர்களிடையே தோனி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அப்போது, தன்னுடைய கடைசி ஐ.பி.எல். போட்டியை சென்னையில் ரசிகர்கள் காணலாம் என்று நம்புவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த வருடமும் தான் நிச்சயம் ஐபிஎல்க்கு வருவேன் என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற தோனி தனது கடைசி ஐ.பி.எல் ஆட்டத்தை சென்னையில் ஆடுவேன் என தெரிவித்துள்ளார்.

3 உலக கோப்பையை வென்ற தோனி ஏற்கனவே இந்திய அணிக்கான அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK ADMK டிடிவி தினகரன் AIADMK MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK கனமழை ரஜினிகாந்த் இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் தமிழகம் INDIAN CRICKET TEAM பாமக பிரதமர் மோடி கொலை CONGRESS அன்புமணி ராமதாஸ் கைது கோவை EDAPPADI PALANISWAMI அமமுக PARLIAMENT ELECTION தீபாவளி வடகிழக்கு பருவமழை COIMBATORE KEERTHY SURESH சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் AJITH நெல்லை NELLAI திருநெல்வேலி கள்ளக்காதல் தமிழ்நாடு தென்காசி SEEMAN விடுமுறை TAMIL ACTRESS THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் மதுரை மழை அஜித் 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் தமிழக அரசு NORTHEAST MONSOON MADURAI டாப் நியூஸ் டிரெண்டிங் OPS வன்னியர் தேவர் பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் THOOTHUKUDI ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம்