POLLING 📊 TN ELECTION 2026

 

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அண்ணாமலை பெயர் - வெளியான பரபரப்பு தகவல்

1 day ago 03 ஏப்ரல் 2026 09:44 AM | views : 134

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.


இதனிடையே தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜ.கவும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.


தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 27 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


இந்த வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், பா.ஜ.க. மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் கேட்ட தொகுதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தி.மு.க.வின் ஊழல் மற்றும் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சகோதர, சகோதரிகள் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாக, நமது பா.ஜ.க. மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Hearty congratulations to all the @BJP4TamilNadu winning candidates announced for the 2026 Tamil Nadu Assembly elections. They carry the support of every brother & sister of TN who is tired of corruption, complacency, and the DMK's betrayal.Under the visionary leadership of our… pic.twitter.com/GJm4Dq0uDQ

— K.Annamalai (@annamalai_k) April 3, 2026

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கைது அன்புமணி ராமதாஸ் கனமழை காங்கிரஸ் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கோவை CONGRESS கொலை COIMBATORE திருமாவளவன் PARLIAMENT ELECTION தமிழ்நாடு சீமான் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM தீபாவளி இந்திய அணி EDAPPADI PALANISWAMI AJITH தென்காசி அமமுக பிரதமர் மோடி KEERTHY SURESH TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM OPS நெல்லை ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN கொரோனா வடகிழக்கு பருவமழை NELLAI தேவர் நடிகை ஓபிஎஸ் அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி PRIME MINISTER MODI மதுரை வன்னியர் MADURAI CSK பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION SEEMAN விடுமுறை