Tamil News & POLLING

 

மணிரத்னத்தை குத்திக் காட்டி பேசினாரா பா. இரஞ்சித்?

1 year ago 20 ஆகஸ்ட் 2024 08:42 AM | views : 140
வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாக உள்ளது.இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முன்னதாக டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இரஞ்சித், “மாரி செல்வராஜ் அனைத்து இயக்குநர்களுக்கும் படத்தைக் காட்டி அது குறித்து பேச வைக்கிறார். என்னுடைய படத்தைப் பாருங்கள் என்று சொல்லவே எனக்கு கூச்சமாக இருக்கும். ஒரு சில இயக்குநர்கள் என் படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் கருத்தை சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்திருக்கிறேன்.

ஒரு பிரபல இயக்குநர், எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என் படத்தைப் பார்த்தும், அதை என்னிடம் சொல்லவில்லை. அவர் என் படத்தைப் பார்த்ததாக அவருடன் சேர்ந்து பார்த்த ஒரு சிலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், அந்த இயக்குநரே தற்போது மாரி செல்வராஜ் படம் குறித்து பேசுகிறார். இதை நான் கேலி கிண்டலுக்காக சொல்லவில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து இரஞ்சித் எந்த இயக்குநரை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே வாழை டிரைலர் வெளியீட்டு விழாவில் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த மணிரத்னம், “மாரி செல்வராஜ் தமிழ் திரையுலகின் வலிமையான குரலாக இருக்கிறார். அவரை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.

இப்படத்தில் எப்படி இவ்வளவு நடிகர்களைச் சிறப்பாக நடிக்க வைத்தார் என்பது தெரியவில்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவரிடம் தனி திறமை உள்ளது” என்றார்.இந்நிலையில், பா. இரஞ்சித் மணிரத்னத்தை குறிப்பிட்டு தான் அந்த கருத்தை தெரிவித்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் AIADMK ADMK டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் PMK சீமான் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை CONGRESS பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி COIMBATORE SEEMAN EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கைது கொலை வடகிழக்கு பருவமழை கோவை தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் விடுமுறை TAMIL ACTRESS தமிழ்நாடு கள்ளக்காதல் ஓபிஎஸ் NELLAI திருநெல்வேலி THIRUMAVALAVAN திருமாவளவன் நெல்லை THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தென்காசி AJITH டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு டாப் நியூஸ் அஜித் TAMIL CINEMA ASSEMBLY ELECTIONS வன்னியர் SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION தேவர் கொரோனா பாலியல் தொல்லை OPS நயினார் நாகேந்திரன் வானிலை ஆய்வு மையம் MADURAI 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON