தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கடந்த 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதே போல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஜெகதீஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் சேகர்பாபு மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், தி.மு.க. எம்.பி.ஆ.ராசா மீதும் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை குலைக்க முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel