தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. உடல்நிலை சீராக உள்ளது- தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தகவல்

சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு கடந்த 9-ந்தேதி அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடுமையான சளியின் காரணமாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டு இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. வி.எஸ்.பாபுவை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. தீவிர மருத்துவ கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு இயல்பாக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.எஸ்.பாபுக்கு அவையில் உள்ள ஏ.சி.யின் குளிர்ச்சி காரணமாக சளி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது நுரையீரல் தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. செயற்கை சுவாச கருவி உதவியுடன் தொடர்ந்து அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல் நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் கேட்டறிந்து வருகிறார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel